sisu3

அமைவிடம்

sisu1
ஸ்ரீ சிவசுப்ரமணிய ஸ்வாமி கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் அமைந்துள்ளது. முருகனின் அறுபடை வீடுகளுக்கு இணையான சிறப்பு வாய்ந்தது.
பண்டைய காலங்களில், இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 33 கோயில்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. காலப்போக்கில் பெரும்பான்மையான கோயில்கள் சிதைந்து, சில கோயில்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

தலவரலாறு

IMG_20170930_163412
திருச்செந்தூரில் சூரசம்காரம் முடிந்த பிறகு, முருகன் இங்கு வந்து, இந்த இரட்டை மலைகளான சஞ்சீவி மற்றும் மேகமருவில் ஓய்வு எடுக்க தங்கினார். இந்த கோவில் சஞ்சீவி மலையின் உச்சியில் அமைந்துள்ளது. இது சித்தர் மலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த புனிதமான குன்றில், முருகன், அகத்தியாருக்கு, தெற்கு முக தரிசனம் அளித்தார்.
மலை கோயிலுக்கு சுமார் 100 படிகளும், மலைக்கு மேல் ஒரு சாலையும் உள்ளன. மலையின் அடிவாரத்தில் எல்லையம்மன் கோவில் மற்றும் ஒரு அழகிய கோயில் தெப்பக்குளம் உள்ளது. தெப்பக்குளத்திற்கு அருகில் விநாயகர் ‘பரணி விநாயகர்’ என்ற பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இக்கோயிலின் தெப்பக்குளம், சஞ்சீவி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது, இது பல நோய்களை குணப்படுத்துவதாக கூறப்படுகிறது.

sisu2
இங்கு சுப்பிரமணியர், 6 முகங்களுடனும், 12 கைகளுடனும் வள்ளி மற்றும் தெய்வானை சமேதராக காட்சி அளிக்கிறார். அருணாகிரிநாதர், ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள் மற்றும் 19 இதர முனிவர்கள் இந்த மலை தெய்வத்தைப் பற்றி பாடி உள்ளனர்.

வழி
பெரும்பேர்கண்டிகை, அச்சிரபாக்கம் அருகில் (சென்னை – திருச்சியிலிருந்து தேசிய நெடுஞ்சாலையில்) சுமார் 5 கி.மீ. உள்ளது. தொழுப்பேட்டில் இருந்து உள்ளே செல்ல வேண்டும்.

Temple: Sri Sivasubramaniya Swamy Temple
Place : PerumperKandikai
District: Kancheepuram
State: Tamilnadu