TamilTravelStories

Arulmigu Erikaththa Ramar @ Kothanda Ramar Temple – Madhuranthagam

IMG_20170815_070237

திருத்தல சிறப்பு

            அருள்மிகு ஏரிகாத்த ராமர் என்கிற கோதண்ட ராமர் திருக்கோயில் மதுராந்தகத்தில் அமைந்துள்ள மிகவும் தொன்மையான கோயில். இக்கோயில் மூலவர் ஶ்ரீ கோதண்ட ராமர், ஜனகவள்ளி (சீதாதேவி) மற்றும் லட்சுமணன் உடன் காட்சி அளிக்கிறார்.

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கி.பி 1795 – கி.பி. 1798 ( சுமார் 215 ஆண்டுகளுக்குமுன்) மதுராந்தகம் ஏரியில் பெரும் உடைப்பு ஏற்பட்டது. அப்போது செங்கல்பட்டு கலெக்டராக இருந்த லயோனல் பிளேசு என்பவருக்கு, ஶ்ரீ கோதண்ட ராமர் தனது தம்பி லட்சுமணனுடன் காட்சி தந்து, ஏரி உடைப்பில் இருந்து ஊரையும் காத்து அருளினார். இதனால் அந்த கலெக்டர், ஶ்ரீ கோதண்ட ராமர் கோயிலுக்கு வந்து, பெருமானை வழிபட்டு, இங்கு உள்ள தாயார் ஶ்ரீ ஜனகவள்ளி சன்னதியையும் சீரமைத்து கொடுத்தார். எனவே இக்கோயிலில் உள்ள ஶ்ரீ கோதண்ட ராமர், ஏரிகாத்த ராமர் என்று பொற்றி வழிபடுகிறார்கள்.

இக்கோயிலில் தான் பெரியநம்பிகள், இராமானுசருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்தார். கோயிலின் முன் தெப்ப குளமும், ஶ்ரீ அஞ்சனேயர் சன்னதியும் அமைந்துள்ளது. 

வழி

சென்னையில் இருந்து திண்டிவனம் செல்லும் வழியில் மதுராந்தகத்தில், மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிறுத்ததிற்கு அருகில் அருள்மிகு ஏரிகாத்த ராமர் (எ) கோதண்ட ராமர் திருக்கோயில் உள்ளது.

Temple:   Arulmigu Erikaththa Ramar @ Kothanda Ramar Temple

Place:      Madhuranthagam

District:  Kanchipuram

State:      Tamilnadu