TamilTravelStories

Arulmigu Abirami Udanurai Sri Amirthagateshwarar Temple- Nayakkanpettai

IMG_20170421_075636

திருத்தல சிறப்பு

பரம்பொருளாம் சிவபெருமானது அஷ்ட வீரட்டானத்தில் ஒன்றாகத் திகழ்வது திருக்கடையூர். அத்திருக்கடையூரின் தலச்சிறப்புகள் அனைத்தையும் பெற்றதுதான் காஞ்சிபுரம் அருகில் உள்ள நாயகன்பேட்டை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு அபிராமி உடனுறை ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைந்து அமிர்தம் எடுக்கும் முன்பு விநாயகரை வழிபடாத காரணத்தால் அவரால் இத்திருத்தலத்தில் மறைத்து வைத்த அந்த அமிர்தகுடமே சிவலிங்கமானதால் மூலவருக்கு அமிர்தம்+கடம்+ஈஸ்வரர்= அமிர்தகடேஸ்வரர் என்ற திருநாமம் உண்டாயிற்று.

நாயகன்பேட்டையில் முன்பு ஒரு காலத்தில் குடிநீருக்காக குளம் தோண்ட, நீர் பெருக்கெடுத்தது. அதன் நடுவே சிவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். நீரில் அமிர்தம் போல் வெளிப்பட்டதால், அமிர்தகடேஸ்வரர் என பெயரிட்டு வழிபட தொடங்கினர். மகாவிஷ்ணுவின் தியானத்தில் உண்டான சக்தியே அபிராமி அன்னையாக திகழ்கிறாள்.

சஷ்டியப்த சாந்தி திருத்தலம் (60-ம் கல்யாணம்)

மார்க்கண்டேயரை, எமனிடம் இருந்து காக்கும் பொருட்டு, எமனையே வதம் செய்ததால், சிவபெருமானுக்கு, காலசஹார மூர்த்தி என பெயர் ஏற்பட்டது. அத்தகைய சிறப்பு இத்தலத்தில், 59 வயது முடிந்து 60 வயது உக்ரரத சாந்திக்கும், 60 வயது முடிந்து 61 வயது சஷ்டியப்த சாந்திக்கும், 69 வயது முடிந்து 70 வயது பீமரத சாந்திக்கும், 80 வயது ஆரம்பம் 85 வயது முடிய சதாபிஷேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமங்களுக்கும் செய்ய சிறப்புடை தலம். திருக்கடையூர் செல்ல வேண்டியது இல்லை. கோயில் நிர்வாகமே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறது. எங்கள் வீட்டுலும் சஷ்டியப்த பூர்த்தி இங்கு தான் செய்தோம்.

நாயகன்பேட்டை, வேகவதி ஆற்றின் வட கரையில் அமைந்து இருப்பதால், இவ்வூர், வட திருக்கடையூர் என்றும் கூறுவர்.

வழி

சென்னையில் இருந்து தாம்பரம் வழியாக காஞ்சிபுரம் செல்லும்போது வாலாஜாபாத்க்கு அடுத்து ஏகனாம்பேட்டையில் இடதுபுறம் செல்ல வேண்டும்.

செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும்போது வாலாஜாபாத்க்கு அடுத்து ஏகனாம்பேட்டையில் இடதுபுறம் செல்ல வேண்டும்.

Temple:   Arulmigu Abirami Udanurai Sri Amirthagateshwarar Temple

Place:     Nayakkanpettai

District:  Kanchipuram

State:      Tamilnadu