TamilTravelStories

Appan Sri Venkatesa Perumal Temple – Thirumukkudal

IMG_20151011_103013_HDR

திருமுக்கூடல்

            திருமுக்கூடல் என பெயர் வர காரணம், ஊன்று ஆறுகள் கூடும் இடம். அதாவது பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் இங்கு கூடி ஒரே ஆறாக பாய்கிறது. இந்த ஆற்றின் கரையிலே, கோயிலின் சுவர் ஒட்டியது போல் அமைந்து உள்ளது அப்பன் ஶ்ரீ வெங்கடேசப் பெருமாள் ஆலயம்

 

ஆலய சிறப்பு

            ஏறத்தாழ சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் அப்பன் ஶ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோயில். இங்கு பெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். ஆதியில் சயன திருக்கோலத்தில் இருந்ததாகவும் பின் தொண்டைமான் சக்கரவர்த்திக்காக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருவதாகவும் கூறப்படுகிறது. அப்போது தொண்டைமான் சக்கரவர்த்தி “அப்பன் வெங்கடேச” என கூறியதால், பெருமாள் இங்கு அப்பன் வெங்கடேச பெருமாள் என அழைக்க படுகிறார். இக்கோயில் அப்பரால் பாடல் பெற்ற கோயில். இந்திய தொல்பொருள் துறையால் பாரமரிக்கப்படுகிறது.

 IMG_20151011_102611_HDR

அரசமரத்தடி பிள்ளையார்

           இந்த கோயிலின் முன்பு ஓர் அரசமரமும் அதன் அடியில் அழகிய விநாயகரும் அமைந்து இருப்பது சிறப்பு. அதுவும் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. விநாயகர் அருகில் நாக தேவதைகளும் அமைந்துள்ளன.

 

வழி

செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் போது 15கீமி-ல் பழையசீவரம். பழையசீவரத்தில் இடதுபுறம் சாலவாக்கம் செல்லும் வழியில் பாலாற்றை கடந்த உடன் கோயில் வரும்.

Temple:   Appan Sri Venkatesa Perumal Temple

Place:     Thirumukkudal

District:  Kanchipuram

State:      Tamilnadu